இன்று முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம்.
சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உட்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இன்று முதல் ஜூலை 10ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள்…
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி போராட்டம்.
எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி நேற்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர். ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்…
5 சிறுவர்கள் கடலில் குளிக்கச் சென்று, ஒருவர் கடலில் மூழ்கி வபாத்
ஐந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கடலில் குளிக்கச் சென்றதால் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். நீர்கொழும்பு, கோமஸ்வத்தையைச் சேர்ந்த 17 வயதான அப்துல் ரஸ்சாக் என்ற சிறுவனே பரிதாபகரமாக கடலில் மூழ்கி மரணமடைந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர்கள் ஐந்து பேர் ஒன்று…
தமது சங்கத்தின் பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்கிழமை இயங்காது
தமது சங்கத்தின் பேருந்து சேவைகள் இன்று (28) இயங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி…
தற்போதைய நிலைமையின் பாரதூரத்தன்மையை புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு நாட்டின் நிர்வாகம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள்…
ஹோமாகம தீ விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்புக்கு வீட்டில் சேமித்து வைத்திருந்த பெட்ரோல்தான் காரணம் – பொலிஸார் தகவல்
கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மாகம்மன பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் அடித்தளத்தில் தீ பரவியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது இரு…
கட்டாருக்குச் செல்கிறார் எரிபொருள் அமைச்சர்
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டார் மன்னர் சேக் தமீம் பின் ஹமாட்…
உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க வீதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே,…
70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும்…
இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாறு – முடிவுரை
இலக்கிய ஆதாரங்கள், வாய்மொழி ஆதாரங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தும் முயற்சிகள் தேவை. ஒரு சிறுபான்மை சமூகத்திற்குள்ள பிரச்சினைகள், இஸ்லாமியர்களுக்குரிய வழக்காறுகள், ஆட்சியாளர்களாக முஸ்லிம்கள் இல்லாத நிலைமை என்பன முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றைக் கட்டி எழுப்புவதில் பிரச்சினைகளாக உள்ளன. எனினும், வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள்…