சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்களை எவரும மீற மாட்டார்கள், அரசாங்கத்துடன் எவரும் இணையப்போவதில்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையப்போவதாக வெளியாகும் செய்திகளை அக்கட்சி முற்றாக மறுத்துள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனேயே இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்களை…
லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ, விற்பனை செய்யவோ எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை
லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ விற்பனை செய்யவோ அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என தகவல் ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.இது தொடர்பில் சிலவார இறுதிப் பத்திரிகைகளிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியான செய்திகளில் எந்த உண்மையும்…
வெளிநாடு செல்ல முயன்ற 47 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேரை வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைய காணமாக இவ்வாறு வெளிநாடு செல்வோர் தொகை அதிகரித்துள்ளது. எனினும் சட்டவிரோதமான முறையில்…
இலங்கையில் இன்றுமுதல் புதிதாக பிறக்கும், குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம்
இலங்கையில் இன்று முதல் -01- ஆரம்பிக்கப்படும் புதிய நடைமுறை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பின்…
டீசலின் விலை 10 ரூபாவினால் குறைந்தது – ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை
எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும். ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.