இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 16858ல் குறைவடைந்துள்ளது.கடந்த 2020ம் ஆண்டில் 301707 பிறப்புக்கள் பதிவாகியிருந்ததுடன் 2021ம் ஆண்டில் இந்த…
இன்று நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த…
13 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய கார்
கற்பிட்டி – ஏத்தாளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் 13 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. எனினும் இந்த விபத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ…
ஐஸ், ஹெரோயினுடன் சொகுசு கார் மீட்பு!
நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை (27) மாலை…
கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்
களுத்துறை வடக்கு கொட்டம்பகஹவத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (27) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை மாணவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய பருப்பு.
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெற்றிக் தொன் கடலைப் பருப்பினை நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று (26) இந்த உணவுத் தொகை கல்வி அமைச்சர் சுசில்…
இலங்கையில் குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள், இது மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை
இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் ‘ பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று -26- தெரிவித்துள்ளது . ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை…
ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து, புகைப்படம் எடுத்தவர்களை தொடர்ந்து தேடும் பொலிஸார்
ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை தெரிவித்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன…
பாரிய அளவில் அதிகரித்த வாழ்க்கைச் செலவு
இலங்கையில் தற்போது குடும்பம் ஒன்றின் மாதாந்த வாழ்க்கைச் செலவு பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு சாதாரண குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அரச நிறுவனங்களில் திறமையற்ற பணியாளர்கள்: எரிசக்தி அமைச்சரின் பகிரங்க அறிவிப்பு
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை என்பன வழிவகுப்பதாக சுட்டிகாட்டியுள்ளார்