பள்ளிவால் நிர்வாகி படுகொலைக்கு, நிர்வாகிகள் தகுதியற்றவர்களாக இருப்பதே காரணம்
நாட்டில் உள்ள பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தெரிவில் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வக்பு சபையும் தீர்மானித்துள்ளன. அனுராதபுரம் அசரிகம ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகியொருவர் அண்மையில் சக நிர்வாகி ஒருவரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்தே…
எரிபொருள் நெருக்கடிக்கு QR முறைமை தீர்வாகாது – கைவிரித்தார் அமைச்சர்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நிதித் திறனை கருத்திற் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை சிறந்த…
ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி சிறையை விட்டு வெளியேறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஊழியர் சேமலாப நிதியம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஞ்சனை பாராளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை – சஜித் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
டீசலை கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இன்று பகல் முதல் ஆரம்பமாகும்.
டீசல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் முதல் கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது
அதிக விலைக்கு முட்டையை விற்ற 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவற்றை கணக்கில் எடுக்காது, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து…
பசியை போக்கவே நான் பதவியை பொறுப்பேற்றேன், மக்களே அநாவசியச் செலவுகளைத் தவிருங்கள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை, அதிலும் எதிர்வரும் ஓராண்டு எமக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாட்டு மக்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை…
பசியில் உள்ளவர்கள் இலவசமாக வந்து உட்கொள்ளுங்கள், கர்ப்பிணிகளுக்கும் கட்டணம் இல்லை – உரிமையாளரின் நெகிழ்ச்சியான செயல்
இலங்கையில் வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை நெகிழ வைத்துள்ளார். தனது உணவகத்திற்கு வரும் வறுமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் உட்கொள்ள முடியும். அதற்கு கட்டணம் அறவிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தனது உணவகத்தில் பதாகை…
எவ்விதமான வேலைகளுமின்றி 100,000 ஊழியர்கள் அரச சேவையில் உள்ளனர்
எவ்விதமான வேலைகளுமின்றி 100,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் அரச சேவையில் இருப்பதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன தெரிவித்துள்ளார். நேற்று சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை…