• Sun. Oct 12th, 2025

பசியில் உள்ளவர்கள் இலவசமாக வந்து உட்கொள்ளுங்கள், கர்ப்பிணிகளுக்கும் கட்டணம் இல்லை – உரிமையாளரின் நெகிழ்ச்சியான செயல்

Byadmin

Aug 25, 2022

இலங்கையில் வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை நெகிழ வைத்துள்ளார்.

தனது உணவகத்திற்கு வரும் வறுமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் உட்கொள்ள முடியும். அதற்கு கட்டணம் அறவிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தனது உணவகத்தில் பதாகை ஒன்றையும் அவர் மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். அதில், “இல்லாதவர்கள் பசியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து உட்கொள்ளுங்கள்.

ஒரு ரூபாயேனும் எங்களுக்கு வேண்டாம்.

உண்மையாகவே அவசியம் உள்ளவர்கள் மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து உணவுகளை பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கு உட்கொள்ளும் உணவிற்கும் பணம் அறவிடப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகமான விலைவாசி உள்ள போதும், இவ்வாறான மனிதநேயத்துடன் சிலர் செயற்படுவது, பசியால் வாடுவோருக்கு பெரிய விடயமாக தென்படுவதாக, பயன்பெற்ற பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *