இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி
ஒருநாள் உலக கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. ஹராரேவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. அதேநேரம் தொடர்…
சமாதான நீதவான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்
ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு நிருவாக கிராம உத்தியோகத்தர்களையும் உத்தியோகபூர்வ சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல், விலை குறைக்கப்படும் சீமெந்து
இன்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது. 2600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை நாளை (07) முதல் 2300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இன்று நடைபெற்ற…
லாப் எரிவாயு விலை குறைப்பு
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (06.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை…
உலகின் மிக ஆபத்தான பறவைகள் இலங்கைக்கு வருகை
தாய்லாந்தினால் 3 ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த…
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (06) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 148,000 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் இதன் விலை 149,000 ரூபாவாக…
டொலர் – இலங்கை ரூபாயின் இன்றைய நிலவரம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள், நேற்றைய விகிதமான ரூ. 297.8 முதல் 300.2 வரை…
பர்வீஸ் மஹரூப் பதவி விலகல்
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவிலிருந்து முன்னாள் நட்சத்திர வீரர் பர்வீஸ் மஹரூப் பதவி விலகியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. சனத் ஜயசூரிய, சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன…
பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தை எரித்து அழித்த பொலிஸ் சார்ஜன்ட்
அக்கரபத்தனை பொலிஸாரின் முறைப்பாட்டு குறிப்பேடுகளின் பக்கங்களை எரித்து அழித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அகரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த புத்தகத்தை அழிக்குமாறு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம், குறித்த…
மீண்டும் இலகு ரயில்
ஜப்பான் அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான யோசனை நேற்று(4) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளதுடன் அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கொழும்பில் உள்ள…