இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் அனைத்து நகரங்களிலும் புதன்கிழமை (05) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்…
யால தேசிய பூங்காவின் சில வீதிகள் மீண்டும் திறப்பு
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின்…
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு: 01. 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல்…
111 தொலைபேசிகளுடன் சிக்கிய தொழிலதிபர்
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 28 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். டுபாயிலிருந்து வந்த சந்தேகநபர், மூன்று சூட்கேஸ்களில்…
பறக்கும் சாரதிகளுக்கு இனி ஆபத்து
போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம்…
சில பகுதிகளில் காலநிலையில் மாற்றம்
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும்…
கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை…
நில மோசடி; 83 வயது பெண் கைது
கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்றதற்காக 83 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி பாதையில் நிலத்தை விற்பனை செய்ததற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அந்தப்…
மின்னல் தாக்கத்தினால் ஒருவர் மரணம்
நிலவும் மோசமான வானிலை காரணமாக, மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை,…
பாடசாலை வேன் விபத்தில் 12 பேர் காயம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் திங்கட்கிழமை (03) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் எரத்னா பிராந்திய…