• Sat. Oct 11th, 2025

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்

Byadmin

Mar 5, 2025

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு:

01. 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி, 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது.

அதேபோல், அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.elections.gov.lk) சஞ்சரிப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

02. இத்தேர்தலின் போது குறித்த உள்ளுர் அதிகார சபை அதிகார இடப்பரப்பில் தேருநர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவிருக்கின்ற அனைத்து அரச அலுவலர்கள்/ ஊழியர்கள், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும், இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலர்கள்/ ஊழியர்கள், அஞ்சல் திணைக்கள் அலுவலர்கள்/ ஊழியர்கள், புகையிரதத் திணைக்கள அலுவலர்கள்/ ஊழியர்கள், முப்படைகளின், பொலிஸ் திணைக்களத்தின் முனைப்பான பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணியின் அங்கத்தவர்கள், வேட்பாண்மை காரணமாக தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாதிருக்குமென்று அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலப்பகுதி முடிவடையும் வரை காத்திருக்காமல் தாமதமின்றி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கத் தகைமை பெறுகின்ற அனைவரும் தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இத்தேர்தலின் போது அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதற்கான தகவல்கள் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்பிலிருந்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. 

03. அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சித்து விண்ணப்பதாரரின் ஆளடையாளம் குறித்து உறுதிசெய்துகொண்டு அத்தாட்சிப்படுத்த வேண்டுமென்றும், அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பங்களை இயன்றளவு விரைவாக குறித்த விண்ணப்பதாரர் தேருநராக பதிவுசெய்து கொண்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2025.03.12 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க வேண்டுமென்றும், அத்திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாதென்றும், உரிய திகதி பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களும் பூரணமற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமென்றும் அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தயவுடன் அறிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி இரு நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் அஞ்சலுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பது மிகவும் உகந்ததென்று கருதப்படுகிறது. 

04. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கு அவசியமான 2024 தேருநர் இடாப்புத் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2024 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்புக்கள் பின்வரும் இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். 
i. அனைத்து மாவட்ட செயலகங்கள் (கச்சேரிகள்) 
(சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு) 
ii. அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள் 
(உரிய இடாப்புக்கள்) 
iii. அனைத்து உள்ளூர் அதிகாரசபைகள்
(ஒவ்வோர் உள்ளூர் அதிகார இடப்பரப்புக்குரிய இடாப்புக்கள்) 
iv. அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள்
(ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குரிய இடாப்புக்கள்) 
05. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

தேருநர் இடாப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிட்டிருக்காத விண்ணப்பதாரர்கள் மேற்படி இல. 04 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமொன்றிலிருந்து தமது பதிவுக்குரிய தகவலகளைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பப்படினங்களைப் பூரணப்படுத்த வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *