பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் திங்கட்கிழமை (03) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் எரத்னா பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உடனடியாக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இருவரை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தாலும், வேறொரு வைத்தியசாலையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மாணவர்களின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வேன், போடியாகல, விட்டாரபங்குவ, லஸ்ஸகந்த போன்ற பகுதிகளிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதுடன் வேன் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.