இரவில் மிகவும் அவதானமாக இருங்கள்
முச்சக்கர வண்டியில் கொட்டாவ நகரிலிருந்து தலகல பகுதிக்குச் செல்லும் போது சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும்…
வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்
தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச…
மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி
அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தண்ணீரில் மிதந்த குழந்தை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், குழந்தை உயிரிழந்தது. இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த…
பல்கலைக்கழக மாணவர்களை வெளியேற அறிவிப்பு!
அம்பாறை – ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம்…
அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா
அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இலங்கையின் அஞ்சல்…
கர்ப்பமான 17 மணித்தியாலங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தாம், கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்த 17 மணித்தியாலங்களில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டு வருடங்களாக ஒருவரைக் காதலித்து வந்த இந்த பெண், தான் சந்தோசமாக இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதாக நினைத்திருந்தார். க்ரிப்டிக் கர்ப்பம் (Cryptic…
நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில்…
ஒரு பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள தங்கத்துடன் இளைஞன் கைது
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர்…
பொம்மை ஆசையில் இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்
பொம்மைகள் நிரப்பப்பட்ட இயந்திரத்துக்குள் சிறுவன் ஒருவன் நுழைந்து அதற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தின் மேசன் நகரத்தில் நடந்துள்ளது. இந்த இயந்திரத்துக்குள் இருக்கும் பொம்மைகளை Joystick மூலம் எடுப்பதுதான் இந்த விளையாட்டு. ஆனால் குறித்த சிறுவன், இயந்திரத்தில் இருந்து…
தயவு செய்து அவதானத்துடன் இருக்கவும்!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவோ…