முச்சக்கர வண்டியில் கொட்டாவ நகரிலிருந்து தலகல பகுதிக்குச் செல்லும் போது சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் முச்சக்கர வண்டியின் ஆவணங்களையும் குறித்த குழு எடுத்துச் சென்றுள்ளது.
குழந்தையை தூக்கிக்கொண்டு பெண்ணொருவர் இரு ஆண்களுடன் கொட்டாவ நகரிலிருந்து இரவு 9 மணியளவில் இந்த முச்சக்கர வண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்ல வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
பின்னால் இருந்த ஒருவர் கைகளால் தனது கண்களை மூடிக்கொண்டு மிளகாய் தூள் போன்ற ஒன்றைப் பூசியதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர் வாகனத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துபவர்கள் இரவில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.