நாடு பூராகவும் திடீர் சோதனை நடவடிக்கை
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 46 வாகனங்கள்…
விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். “விமான நிலையத்தைச்…
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான…
இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம்
இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார். ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க சிரியப் படைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ…
வயலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை ; தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணை
குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில்…
விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து
விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து நுவரெலியா – ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு கடையில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் ஹட்டன் டிக்கோயா…
சுற்றுலா பயணிகளுக்கான நவீன சேவை
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பயணிக்கும் மக்களுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் புதிய நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் (service counter) ஒன்று உருவாக்கப்படவுள்ளது.…
தனியார் வகுப்பு நடத்த தடை விதிப்பு
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகள் தமிழ் மொழி கட்டாயம், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் வியாழக்கிழமை(17) இடம்பெற்ற மாநகர…
ரயிலில் மோதி காட்டு யானை பலி
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த காட்டு யானை அப்பகுதியில்…