சம்பியன்ஸ் லீக்: மட்ரிட்டை வென்ற சிற்றி
சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. சிற்றி சார்பாக நிக்கோ ஓ…
ட்ரம்ப் -மோடி தொலைபேசியில் உரையாடல்
அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நேற்று வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்தியா மீது…
தாய்லாந்து பாராளுமன்றம் கலைப்பு
கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது, 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்
நுவரெலியாவுக்கு இரவில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்..
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும், இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில்…
200 தொன் உதவிப் பொருட்களுடன், இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் கப்பல்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கைக்கு மேலதிகமாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பும் என அந்நாட்டின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜூனைத் அன்வர் சௌத்ரி தெரிவித்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில்,…
ஜப்பானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று காலை 11:44 மணிக்கு (0244 GMT) அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 6.7…
யாழ்ப்பாணத்தில் 3 வயது குழந்தை மீது கொடிய சித்திரவதை
யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணங்களைச் செய்தவர் என்றும், அவர் இரண்டாவதாகத் திருமணம்…
கத்தார் அமீருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
இலங்கை முழுவதும் அவசரநிலையை ஏற்படுத்திய தித்வா சூறாவளியைத் தொடர்ந்து, மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், வீட்டுவசதி, மருத்துவமனைகள், முக்கிய வீதி வலையமைப்புகளை கடுமையாக பாதித்த போது, கத்தார் அமீர் ஷேக் @TamimBinHamad அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு, நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.…
“ஜப்பானில் ஒரு வாரத்துக்குள் பாரிய நிலநடுக்கம், சுனாமி”
“ஜப்பானில் ஒரு வாரத்துக்குள் பாரிய நிலநடுக்கம், சுனாமி” ஜப்பானில் ஒரு வாரத்துக்குள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், 98 அடி உயர சுனாமி ஏற்படும் ஆபத்தும் உள்ளது என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் வட கடலோரப் பகுதிகளான ஹொக்காய்டோ,…
ஆஷஸிலிருந்து ஹேசில்வூட் விலகல்
குதி, கெண்டைக்கால் பின்தசைக் காயங்களால் அவதிப்படுவதையடுத்து எஞ்சியுள்ள ஆஷஸ் தொடரிலிருந்து அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட் விலகியுள்ளார். முதலாவது, இரண்டாவது போட்டிகளையும் தவறவிட்ட ஹேசில்வூட், எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டாரென அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை மூண்றாவது போட்டியில் அணிக்குத்…