(அடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்)
பாதாம் பருப்பில் விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் 1/8 பங்கு பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து அடங்கியுள்ளது.
அதனால் தான் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், எடை குறைப்பு ஆகியவற்றை செய்ய விரும்பும் பலரும் பேலியோ டயட் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அந்த டயட்டின் அடிப்படையே புரோட்டீனும் நல்ல கொழுப்பு உணவுகளும் தான். அதில் பாதாமுக்கு தான் அவர்கள் முதன்மையான இடத்தைத் தருகிறார்கள்.
இந்த பாதாம் பருப்பை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
பச்சையாக அல்லது வறுத்தோ அல்லது சிப்ஸ் வடிவத்திலோ, மாவு வடிவிலோ, எண்ணெய் வடிவிலோ அல்லது பாதாம் மில்க் வடிவிலோ கிடைக்கின்றன.
இந்த நவீன காலத்தில் உடல் பருமனை குறைக்க நாம் தினசரி உடற்பயிற்சி, கடுமையான டயட் முறைகள் என பின்பற்றி வருகிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பை நமது தினசரி உணவில் சேர்த்து கொண்டாலே போதும் உடல் எடையை குறைக்க இயலும்.
இதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் தான். தொப்பையை குறைக்க பாதாம் பருப்பில் அதிக அளவு புரோட்டீன் சத்து இருப்பதால் வலுவான தசைகளின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. உடல் நிறை குறியீட்டு எண்ணை கட்டுப்பாட்டில் வைக்க இதிலுள்ள மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றன. இதன் மூலம் தொப்பையை குறைக்க இயலும்.
உடல் எடையை குறைக்க நன்றாக வறுத்த பாதாம் பருப்பை உங்களுக்கு பசி ஏற்படும் போதெல்லாம் சாப்பிடலாம். அவுன்ஸ் கணக்கில் எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
பாதாம் பருப்பை உங்கள் காலை உணவில் சேர்க்கும் போது நீண்ட நேரம் பசி உணர்வை கொடுக்காது. வயிறு நிரம்பி இருப்பது போன்று தோன்றும். இதனால் உங்கள் மதிய உணவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீர்கள்.
ஓட்ஸ் மற்றும் செரல் உணவுகளில் அப்படியே நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிடலாம். மதிய வேளைகளில் பாதாம் ரைத்தா தயாரிக்கலாம். நறுக்கிய பாதாம் பருப்பை யோகர்ட் உடன் சேர்த்து அதில் அப்படியே உங்களுக்கு பிடித்தமான கார மசாலாக்களை சேர்த்து தயாரிக்கலாம்.
இதில் நிறைய புரோட்டீன் மற்றும் நல்ல பக்டீரியா இருப்பதால் உடல் எடையை எளிதாக குறைக்க இயலும்.
நறுக்கிய பாதாம் பருப்பை பாஸ்தா அல்லது சாலட் உடன் சேர்க்கலாம். இது கொஞ்சம் கடினமான உணவு என்பதால் கொஞ்சமாக உங்கள் வயிறு நிரம்பும் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இப்படி தினசரி உங்கள் உணவில் பாதாம் பருப்பை சேர்த்து வருவதோடு போதுமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் உங்கள் கனவு நிறைவேறும்.