• Sat. Apr 4th, 2026

2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது

Byadmin

Jul 18, 2018

(2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது)

2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

பெறுபேறுகளை அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.

இந்த பரீட்சைக்காக 169,412 பேர் விண்ணப்பித்திருந்ததுடன், 158,805 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *