(“கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை” – மஹிந்த)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டதாக தெரிவித்து பொய்யான அறிக்கை ஒன்று நேற்று(17) சிலரால் சமூக வலைதளங்களில் பரவியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த போலி அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷவை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஊடக செயலாளர் மேலும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொதுஜன முன்னணியின் பொது வேட்பாளர் குறித்து ஊடக அறிக்கையினூடாக தெரிவிக்காது பிரசித்தமாக வேட்பாளரின் பெயரினை அறிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கை…