• Sat. Oct 11th, 2025

நாட்டில் 926 முஸ்லிம் பாடசாலைகள்

Byadmin

Jul 23, 2018

(நாட்டில் 926 முஸ்லிம் பாடசாலைகள்)

இலங்கையில் 926 முஸ்லிம் பாடசாலைகள் இருந்து கொண்டிருப்பதாக கல்வி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக கிழக்கு மாகாணத்தில் 362 அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் குறைந்த எண்ணிக்கையாக ஊவா மாகாணத்தில் 30முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளன.

மாவட்ட ரீதியாக முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கை விபரம்,
கொழும்பு – 14
கம்பஹா – 20
களுத்துறை – 22
கண்டி – 80
மாத்தளை – 21
நுவரெலியா – 12
காலி – 10
அம்பாந்தோட்டை _ 10
மாத்தறை – 12
யாழ்ப்பாணம் – 03
கிளிநொச்சி – 01
மன்னார் – 41
முல்லைத்தீவு _ 04
வவுனியா – 12
அம்பாறை – 158
மட்டக்களப்பு – 76
திருகோணமலை – 128
குருணாகல் – 80
புத்தளம் – 63
அநுராதபுரம் – 66
பொலன்னறுவை – 20
பதுளை – 22
மொனராகலை – 08
கேகாலை – 35
இரத்தினபுரி – 08
இலங்கையில் மொத்தமாக 10194 அரச பாடசாலைகள் உள்ளன. இதில் 6966 சிங்கள பாடசாலைகளும் 2302 தமிழ் பாடசாலைகளும் உள்ளதாகவும் கல்வி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் மேலும் தெரிவிக்கின்றது.

ஏ.எல்.ஜுனைதீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *