(மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா)
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 2 கப்
கடலை மாவு – 2 கப்
சாட் மசாலாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவைக்கு
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், தண்ணீர் – தேவைக்கு உப்பு – தேவைக்கு
செய்முறை :
பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.