(பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(17) தீர்மானம்)
பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(17) தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளதாக அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு நியாயமான தீர்வொன்றினை அரசு வழங்கத் தவறியமையினாலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஏற்ப பேரூந்து கட்டண திருத்தத்திற்கும் விலைச் சூத்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்த அரசுக்கு காலம் வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் இரு வாரங்களில் முறையான பதில் கிடைக்காதவிடத்து அது குறித்து அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.