(ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவுசெய்யப்பட்டாா். அவரது இல்லத்தில் நேற்று (24) புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ.ல சு கட்சி முஸ்லிம் உள்ளுரா்ட்சி 164 உறுப்பினர்கள் கலந்து கொண்டனா். அத்துடன், ஸ்ரீ.சு கட்சியின் செயலளாா் அமைச்சா் மகிந்த அமரவீரவும் கலந்துகொண்டாா். இங்கு அடுத்த முறை ஜானதிபதியாக தோ்தலில் மைத்திரிபால சிறிசேனாவை முஸ்லீம்கள் எவ்வாறு மீள வெற்றிக்காக பாடுபடுவது நாடு முழுவதிலும் முஸ்லீம் ஸ்ரீ.ல சு.கட்சி அங்கத்தவா்கள் சோ்த்துக் கொள்ளல் பெண் அங்கத்தவா்கள் மற்றும் கட்சியினை ஸ்ரீ.ல சுகட்சி கிளைகளை புனரமைப்பது மற்றும் அபிவிருத்திகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது . அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அமைச்சா் பைசா் முஸ்தாபாவினை ஸ்ரீ.ல.சு கட்சியின் பொதுத் தோ்தல் போட்டியிடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரின் வெற்றிக்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி உறுப்பினர்கள் வெற்றிவாகை ’சூடுவதற்கு உதவுகின்றோம். எனவும் தெரிவிக்கப்பட்டது.
-அஷ்ரப் ஏ சமத்-