(எனது பெயரை அகற்றுவதில், எவ்வித பிரச்சினையும் இல்லை)
காலி மைதானத்தின் விளையாட்டரங்கில் உள்ள தனது பெயரை அகற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்தோதய என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வகத்தின் பெயரும் அகற்றப்பட்டுள்ளதுடன் மஹிந்தோதய என்பது மஹிந்த இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.