(‘Smart Phone’ போய் ‘Intelligent Phone’ வந்துவிட்டது)
Artificial Intelligence (AI) எனும் செயற்கை அறிவுத்திறன் தற்போது பாவனையில் இருக்கும் ‘Smart Phone’ களின் அடுத்த கட்ட நகர்வாக அவற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தி ‘Intelligent Phone ‘ என்ற உருவெடுத்து வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது என்றும் ஸ்மார்ட்போன்களுக்கு செயற்கை அறிவுத்திறனை (AI) புகுத்துவது தொழில்நுட்பத்தில் அடுத்த கட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் என்றும் நாம் ஒரு நாளைக்கு 35000 தீர்மானங்களை எடுப்பதாகவும் அவற்றுக்கு AI உதவக்கூடும் என்றும் கூறுகிறது Huawei நிறுவனம். இவற்றுள் NPU (Neural processing unit ) எனப்படும் அதி சக்தி வாய்ந்த “Micro Processor Chip ) கள் செயற்படுகின்றன.
மொபைல் AI தொழிநுட்பம் ஆனது ‘Smart Phone’ களின் பிரதான இரண்டு அமசங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் .
1- பயன்படுத்துபவர் – இயந்திரம் இடையீடு ( User-machine interaction )
2-சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை ( Context-Personalized Openness)
முதல் அம்சம், பயன்படுத்துபவருக்கும் தொலைபேசிக்கும் இடையே எழுத்து , குரல், படம், வீடியோ மற்றும் உணரிகள் (sensors) மூலம் தொலைபேசியின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் .
இரண்டாவது அம்சம் ,சொந்த மற்றும் மூன்றாம் தரப்பினரது Apps முழுவதற்குமிடையிலான ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்,அவற்றுக்குத் தேவையான சேவைகளை மும்முரமாக வழங்கிக் கொண்டிருக்கும் .
Huawei யின் மொபைல் AI ஆனது சாதனத்தில் இருக்கும் (On-device AI) மற்றும் மேகத்தில் இருக்கும் (Cloud AI ஆகியவற்றின் தொகுப்பாகும் .
இந்தத் தினத்தில் மொபைல் போன் உற்பத்தியில் உலகில் முதலாம் இடத்தில் Samsung இருக்க இரண்டாம் இடத்தில் இருந்த Apple ஐ மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு 13 மில்லியன் அலகுகளை விற்று Huawei இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது என்பது தெரிந்த விடயமே
இனி எமது AI மொபைல் தான் எங்கள் ஆலோசகர்.சொந்த மூளையை மூலைக்குத் தள்ளி விடுமோ?
-ஹரீஸ் ஸாலிஹ் –