வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
வட்ஸ்அப் ஊடாக பணம் கோரும் குழு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட்ஸ்அப் குழுக்களை பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.