2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது மார்ச்சில் முடிவடைவதுடன் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரொட்டின் பதவிக்காலம் முடிவடைவதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ட்ரொட் 2022 ஜூலையில் பதவியேற்றிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் முதற் தடவையாக அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறியிருந்தது.
அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரக இருபதுக்கு – 20 தொடரானது ஐ.எல்.டி20 தொடரின் கல்ஃப் ஜையன்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ட்ரொட் பணியாற்றவுள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகுமென ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தவிர துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் அன்றூ புட்டிக்கினுடைய ஒப்பந்தம் டிசெம்பர் 31ஆம் திகதி முடிவடைவதுடன் அவரிடமிருந்தும் பிரிய ஆப்கானிஸ்தான் தீர்மானித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் புட்டிக் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகியிருந்தார்.