• Tue. Nov 4th, 2025

இப்படியும் ஒரு சகோதரர்

Byadmin

Nov 4, 2025

கிண்ணியா 5 பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில், போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா? என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில், ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரியும் ஜலால்தீன் நாம்தீன் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரோ எந்த மறுப்பும் தெரிவிக்காது, மனமுவந்து சுமார் 6 அடிக் காணியை சுற்று வளைவிற்காக விட்டு, புதிய மதிலை அமைத்துள்ளார்.

அவர்களுக்கு கிண்ணியா மக்கள் சார்பாகவும், கிண்ணியா நகரசபை சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிகின்றோம்.

தற்போது இவ்வாறான தாராள மனம் கொண்டவர்கள் அரிது.

அரச காணியை சட்டவிரோதமான அபகரிப்பே அதிகமாக காணப்படும் தருணத்தில். குறித்த ஆசிரியரின் தாராள மனதை பாராட்டுவோம்.

– ஹஸ்பர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *