• Fri. Nov 28th, 2025

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

Byadmin

Nov 12, 2025

ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் வடிவமைப்பை இந்த வாரம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த இஸ்ஸே மியாக்கி வடிவமைப்பு, இணையம் மூலமாகவும், உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மூலமாகவும் வெளியிடப்படும் வரையறுக்கப்பட்ட பதிப்புக் சாதனமாகும்.

இது 2025 நவம்பர் 14 ஆம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் இடங்களிலும், அத்துடன் பிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் apple.com மூலமாகவும் கிடைக்கும்.

“ஐபோனை உங்கள் சொந்த பாணியில் அணிவதற்கான மகிழ்ச்சி” என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஐபோன் Pocket வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது காலுறை போன்ற வடிவமைப்புடையது என்றும், வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் இரண்டு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் Pocket-ஐ உருவாக்கும் முக்கிய நோக்கம், ஆப்பிள் ஐபோன் தயாரிப்புகளின் அழகியல் அம்சத்தையும் பயன்பாட்டுப் பன்முகத்தன்மையையும் சமூகமயமாக்குவதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *