(பொல்கஹவலை பனலிய – ரயில் விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் இன்று)
அண்மையில் பொல்கஹவலை பனலிய பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் இன்று(13) ஆரம்பமாகின்றது.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலானது தொழிநுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் இருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த ரயில், நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் மோதியிருந்தது.
சம்பவத்தில் ரம்புக்கணை ரயிலின் செலுத்துனர், உதவி செலுத்துனர், கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.