(மஹிந்த தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடல்)
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நாளை(14) முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், ஒன்று கூடி கலந்துரையாட உள்ளனர்.
குறித்த கூட்டத்தின் போது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதியன்று கொழும்பில் நடத்தவிருக்கின்ற, அரசாங்கத்துக்கு எதிரான பேரணி தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது என குறித்த கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசியலமைப்பிலோ மற்றும் சம்பிரதாயத்தின் பிரகாரமோ இல்லையென கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.