(மாணவர்களைப் பிரிக்காதீர்கள்!)
மாணவ, மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்காக ஒரே வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களை
தரம் பிரித்து வெவ்வேறாக மாற்றுவதால் குறுப்பிட்ட சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்பவர்களாகவும் மற்றயை மாணவர்கள் கல்வியில் சற்று பின்னடைவை எதிர் நோக்குபவர்களாகவும் காணப்படுவதை இன்றைய கல்விச் சூழலில் நாம் காணக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக சில பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்துதல் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதற்காக இவ்வாறான தரம் பிரித்தல் வேளைகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு குறித்த மாணவர்களை தரம் பிரிப்பதனால் கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாவதாக தெரியவருகிறது.
பல வருடங்களாக ஒரே வகுப்பில் கல்வி கற்று ஒன்றாக பழகிய மாணவர்கள் மத்தியில் திடீரென்று இவ்வாறு தரம் பிரிப்பதனால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு அசௌகரிகங்கள் ஏற்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான தரம் பிரித்தல் செயற்பாடுகளை கல்வி அதிகாரிகள் தடைசெய்திருந்தும் சில பாடசாலைகளில் தரம் பிரித்தல் இடம்பெருவதினால் மாணவர்கள் மேற்சொன்ன பாதிப்புக்களுக்குல் உள்வாங்கப் படுகின்றனர்.
எனவே பாடசாலை சமூகம் இது தொடர்பில் கூடுதல் கவனமெடுத்து அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியினை வழங்கி எதிர்காலத்தில் அனைவரும் இந் நாட்டின் நட்பிரஜைகளாக மிளிர நாம் அனைவரும் முயற்சிகளை எடுப்பது சிறந்த கல்விச் சமூகத்தை உறுவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-அபூ நமா-