(இதய ஆரோக்கியத்திற்கு இறால் சாப்பிட்டால் நல்லதா..?)
இதய ஆரோக்கியம் எனும் போது எமது உடலில் சேரும் கொழுப்புச் சத்தும் பெரும் பங்கு வகிக்கின்றது. கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன.
நாம் விரும்பி உண்ணும் இறாலில் நல்ல கொழுப்பே அதிகளவில் உள்ளது. இந்த கொழுப்பானது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகின்றது. இதனடிப்படையில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் இறாலினை உண்பது மிகச் சிறந்தது.
இறாலில் கேடு விளைவிக்கக் கூடிய கொழுப்பு உள்ள போதும், அதில் உள்ள நல்ல கொழுப்பு அதை விட அதிகமாக இருப்பதால் கேடு விளைவிக்கப்படுவது தடுக்கப்படுகின்றது.
எனவே, இறால் உடல் வெப்பத்தை அதிகரிக்கக் கூடியதாக இருப்பினும், அது இதயத்தை பாதுகாக்கும் செயலையே செய்கின்றது என்பதை நினைவில் கொள்வோம்.
பிறகென்ன? இறாலை உட்கொண்டு இதய நோய்களைத் தடுப்போம்.