• Sun. Oct 12th, 2025

“ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தால் அறிவிக்கவும்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Byadmin

Jun 17, 2017

ஞானசார தேரரைப் பிடிப்பதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் அவரைக் கைது செய்ய செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி,  ஞானசார தேரருக்கு மறைந்திருக்க உதவுவது, குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என  அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் ஆஜராகாமை குறித்து கொழும்பு கோட்டை  நீதிமன்றம் தேரருக்கு பிடியாணை பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.

ஞானசார தேரர் தொடர்பில் தகவல் தெரிந்தவர் பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறும் பொது மக்களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேட்டுள்ளார்.

அதேபோன்று, ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *