(எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு)
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், 5 சதவீதத்தினால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.