• Tue. Oct 14th, 2025

ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த உணவுகளை தொட்டும் பார்க்காதீங்க..!

Byadmin

Sep 11, 2018

(ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த உணவுகளை தொட்டும் பார்க்காதீங்க..!)

நாம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாதகவும் இருக்க வேண்டுமெனில் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும், தேகாரோக்கியத்தை நல்ல முறையில் பேண, நாம் உட்கொள்ளும் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?

அவை என்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. இனிப்பான பான வகைகள்
அதிக இனிப்பு உடலுக்கு ஆபத்து என்பது எமக்குத் தெரியும். அதனால் அதிகளவு இனிப்பு பானங்களை பருகக் கூடாது. இதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கும். மேலும் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்பட காரணமாய் அமையும்.

02. பிட்சா
பிட்சாவை தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியன. எனவே இதனை தவிர்ப்பது சிறந்தது. வீட்டில் தயாரிக்கப்படும் பிட்சாக்களில் இந்தப் பிரச்சினை இல்லை.

03. மாஜரின்
மாஜரினில் எண்ணற்ற செயற்கைப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இதனை தவிர்ப்பது சிறந்தது.

04. ரமென்நூடில்ஸ்
ஒரு கட்டு ரமென் நூடில்ஸில் 14 கிராம் கொழுப்பும் 150 மில்லி கிராம் சோடியமும் அடங்கியுள்ளது. இது உடம்பிற்கு சிறந்ததல்ல.

05. மதுசாரம்
மதுசாரம் அருந்துவது ஹைப்பர்டென்ஷனை ஏற்படுத்துவதோடு உடலின் ஏனைய பாகங்களுக்கு இரத்தம் விநியோகிக்கப்படுவதை குறைக்கின்றது. எனவே மது அருந்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *