( இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு)
சவூதி அரசின் உதவியுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளின் போது நிர்மாணப் பணிகளை முன்னெடுத்திருந்த நிறுவனத்திற்கு சொந்தமான 94 மில்லியன் ரூபா பெறுமதியுடைய இயந்திரம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட்டதாகவும், குறித்த பொருட்கள் தொடர்பில் இருந்த நம்பிக்கையினை உடைத்ததாகவும் தெரிவிக்கும் சம்பவம் தொடர்பில் தொடர்புடைய இராஜாங்க அமைச்சரான ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘லங்கா பில்டர்ஸ் கோர்பரேசன் சொசயிடி’ நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த ஐ.ஜி ஊடாக கடந்த ஜனவரி மாதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.