• Sat. Oct 11th, 2025

“ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும்” விராட் கோலி

Byadmin

Jun 19, 2017
‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

‘தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனது முகத்தில் சிரிப்பு இருக்கிறது. அதற்கு காரணம், நமது வீரர்கள் இந்த தொடரில் ஆடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும். எல்லா வகையிலும் எங்களை தோற்கடித்து விட்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள்.

கிரிக்கெட்டில் சில நேரம் சிறு விஷயம் கூட பெரிய தாக்கத்தை  ஏற்படுத்திவிடும். ஆனால் இப்போது நாங்கள் தோற்று விட்டோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு சென்று விட வேண்டும். டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது சரியான முடிவு தான். ஏனெனில் ஆடுகளம் ஆட்டம் முழுவதும் ஒரே மாதிரியாகவே இருந்தது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *