இந்த நாட்டில் சகல சமுகங்களும் இணைந்து சகலரும் ஓரே நாடு நாம் அணைவரும் இலங்கையா் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். என எதிா்க்கட்சித் தலைவா் ஆர். சம்பந்தன் தெரிவித்தாா.
நேற்று முன்தினம் (17) மொரட்டுவையில் உள்ள சர்வோதாய அமைப்பின் 19வது வருடாந்த பரிசலிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக எதிா்க்கட்சித் தலைவா் ஆர்.சம்பந்தன் கலந்து கொண்டாா். இந் நிகழ்வு சர்வோதாயத் தலைவா் டொக்டா் ஏ.ரீ. ஆறியரத்தின தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சமுக சேவையில் சேவையாற்றியவா்களை சர்வேதாயம் பாராட்டி களரவித்தது. அங்கு உரையாற்றுகையிலேயே ஆர். சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தாா்
தொடா்ந்து உரையாற்றிய ஆர்.சம்பந்தன் தெரிவித்தாவது –
இந்த நாட்டில் நீண்டகாலமாக சிறுபாண்மை மக்களுக்கு ஒரு தேசிய பிரச்சினை இருந்து வருகின்றது. தற்பொழுது அந்த பிரச்சினைக்கு தீா்வு கானும் பொருட்டு புதிய அரசியல் சாசனம் ஒன்று உறுவாக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் வாழ் சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஜக்கிய இலங்கைக்குள் நாம் எல்லோரும் இலங்கையா் என்ற வகையில் இந்த அரசியல் சாசனத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலங்கையில் 1948 ஆம் ஆண்டு சுத்நதிரம் அடைந்தன் பின் ஜக்கிய இராஜ்சியத்தினால் உருவாக்கிய அரசியல் சாசனம் இருந்து வருகின்றது. இச் சாசனம் சகல சமுகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
நாமக்கு தற்போதுல்ல இரு பெரும் கட்சிகள் கொண்ட பாராளுமன்றம் உள்ளது. இந்த அரசாங்கம் அமைத்துவருகின்ற அரசியல் சாசனத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்படல் வேண்டும். அத்துடன் சர்வஜென வாக்கெடுப்புக்கு விடப்படும். ஆகவே இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் நாம் அணைவரும் இலங்கையன், ஒரு நாட்டவா், என ஜக்கியமான உணா்வு ஏற்பட்டு இதற்கு ஆதரவளிக்க வேண்டும். ஆகவே இந்த நாட்டில் உண்மையான சமாதானம், சுதந்திரம் நல்லிணக்கமும் சமத்துவமும் ஏற்படும் இந்த நாட்டின் தலைவர்களாக இருந்த. டி.எஸ். சேனாநாயக்க தொட்டு மகிந்த ராஜப்க்ச வரையிலான தலைவா் காலத்தில் சிறுபான்மைப்பிரச்சினை அரசியல் சம்பந்தமான திருத்தங்கள் அவா்கள் எடுத்த நடவடிக்கைகள் பிரச்சினைகள் பற்றியும் எதிா்கட்சித் தலைவா் விரிவாக எடுத்துக் கூறினாா்.
மேலும் அவா் டொக்டா் அரியரத்தினவின் சர்வோதய அமைப்பு இந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளாக மக்களின் வாழ்வை வலுவுட்டி, வளப்படுத்தும் உயரிய பணியில் செயற்படுவதையும் 15 ஆயிரம் கிளைகளைக் கொண்டு துண்பப்பட்ட மக்களுக்கு நாடு புராவும் சென்று உதவுவதையிட்டும் நன்றியும் பாராட்டையும் அவா் தெரிவித்தாா்
-அஷ்ரப் ஏ சமத் –