வேலைப் பழு அதிகரித்த காரணத்தால் எமக்கு தலைவலி, கைவலி, கால்வலி, பல்லுவலி போன்ற பல்வேறு வலிகள் ஏற்படுகின்றன. அப்போது அந்த வலியைக் குறைப்பதற்காக நாம் சில மருந்துகள் அல்லது பெய்ன்கில்லர்களை குடிப்பதுண்டு. இதன் மூலம் நாம் வலியிலிருந்து நிவாரணம் பெற்றாலும் அந்த பிரச்சினைக்கு முற்று முழுதாக தீர்வு காண முடியாது போகின்றது.
எனினும், இயற்கை பொருட்களை வைத்தே இந்த வலிகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்; என்பது உங்களுக்குத் தெரியுமா?
முறை 01
தேவையான பொருட்கள்
01. 4 கோப்பைத் தண்ணீர்
02. 1 தேக்கரண்டி மஞ்சள்
03. தேன்
04. எலுமிச்சம்
05. இஞ்சி
செய்முறை
தண்ணீரை முதலில் சூடாக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூளை இடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்து அதில் தேன் எலுமிச்சம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இந்த பானத்தை அப்படியே அருந்தலாம்.
முறை 02
தேவையான பொருட்கள்
01. ஒரு கோப்பை தேங்காய்பால் அல்லது பாதாம் பால்
02. ஒன்றரை தேக்கரண்டி தேன்
03. அரைத் தேக்கரண்டி மஞ்சள்
04. அரை இன்ச் நறுக்கிய இஞ்சி
05. மிளகு சிறிதளவு
செய்முறை
ஒரு கோப்பையில் பாலை இட்டு கொதிக்க விடவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் ஏனைய அனைத்தையும் இட்டு கலக்கிக் கொள்ளவும். அதன் பிறகு குறித்த கலவையுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கலந்து அதனை வடிகட்டவும். பின்னர் இதனை பருகலாம்.
முறை 02
தேவையான பொருட்கள்
01. மூன்றில் ஒரு பங்கு தேன்
02. இரண்டரை தேக்கரண்டி அரைத்த மஞ்சள்
03. அரைத்த மிளகு
04. எலுமிச்சை
செய்முறை
முதலில் மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து பசை போல் ஆக்கிக் கொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை கொதிக்கும் தண்ணீரில் இடவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு மிளகு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இதனை நன்கு கலக்கி பருகலாம்.
அழற்சியை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் மஞ்சளில் காணப்படுவதால் நமக்கு ஏற்படும் வலிகள் மற்றும் தசை சார்ந்த வலிகள் குணமடையும். கர்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை பருகக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.