(மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…)
நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மேல், வடமேல் மற்றும் கிழக்கு மாகாண கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.