(2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…)
2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.
இதேவேளை , கைப்பேசிகளின் செயல்திறனை அதிகரிப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட துணை நகரங்களில் உணர்கொம்பு முறையொன்றினை (Antenna system) செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.