(இஸ்ரேல் கொலைவெறி – பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் கொலை)
ஹிட்லரினால் விரட்டப்பட்ட யூதர்களுக்கு ஆதரவளித்த பாலஸ்தீன நாட்டிற்கே துரோகம் செய்து பலஸ்தீன மண்ணில் சட்டவிரோத இஸ்ரேல் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயமே.
அப்பாவி பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானம் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அதே சமயம் பாலஸ்தீன சிறுவர்கள் 3 தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. #Gaza #Palestinian #IsraeliStrike