(கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசார் 2000 பேர் மற்றும் 10 STF குழுக்கள் களத்தில்)
அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன்.
கலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.