இதற்கமைய, இந்தப் போராட்டத்துக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டில் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் மக்களை கொழும்புக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கலந்துரையாடலின் போது இந்த ஆதரவு போராட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.