அதனை அடுத்து நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியை சந்தித்து மீண்டும் விரைவில் பாராளுமன்றை கூடுமாறு வேண்டுகோள் விடுக்க , ஜனாதிபதியும் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால் திகதி பற்றி தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் அது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அதிரவரும் திங்கள் கிழமை ( நவம்பர் 5 ) மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.