(ஆப்பிளை இப்படியும் சாப்பிடலாமா..? இதோ எளிய டிப்ஸ்..!)
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் வைத்தியரிடம் செல்லத் தேவையில்லை என முன்னோர்கள் கூறுவார்கள். அது மிகவும் உண்மையானதே. இது குடல் பகுதிகளில் உள்ள நல்ல பக்டீரீயாக்களைப் பேணுவதற்கு உதவுவதுடன் சமிபாட்டுத் தொகுதியை சீராகவும் வைத்திருக்க உதவும்.
இதன் சுவை காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிச் சாப்பிடுவார்கள். மேலும் இது குறைவான் கலோரிகள் காணப்படுவதனால் உடல் எடை அதிகரிக்காது. இதில் உள்ள அதிகளவான அண்டிஒக்ஸிடன் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. நாம் இன்று பார்க்க இருப்பது ஆப்பிளை எவ்வாறு சாப்பிடுவது என்பதே.
ஆப்பிளை சாப்பிடும் சில முறைகள்.
1. கடைகளில் முதலில் ஆப்பிளை வாங்குதல்.
கடைகளிற்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்கும் போது குக்கீஸ் போன்றவற்றை தெரிவு செய்வதற்குப் பதிலாக ஆப்பிளை எடுப்பது சிறப்பானது.
2. ஆப்பிள் மற்றும் தோடம்பழத்தைச் சாப்பிடுதல்.
ஆப்பிள் மற்றும் தோடம் பழத்தில் உள்ள அண்டிஒக்ஸிடன் மூளையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. வாழைப்பழத்திலும் இவ்வாறான பண்பே உள்ளது. அதனால் இந்தப் பழங்களை தினமும் சேர்த்துக் கொள்வதனால் மூளை நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
ஆப்பிளையும் சாக்லேட்டையும் சேர்த்து சாப்பிடுவதனால் போதியளவு இனிப்புச் சுவை கிடைப்பதுடன், இரத்தக் குழாய்களையும் பாதுகாக்கின்றது. ஆப்பிளில் உள்ள கியூரசட்டின் மற்றும் சாக்லேட்டில் உள்ள கட்டச்சின் எனும் ப்ஃளேவனோயிட் சேர்த்து உடலிற்கு கிடைப்பதனால் குருதின் சிறுதட்டுக்கள் சேர்ந்து கொலாஜன் உருவாக்காமல் தடுத்து இரத்தம் உறையாமல் பாதுகாக்கும். இதனால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.
4. ஆப்பிளும் சீஸும்
ஆப்பிள் உமிழ் நீரை அதிகம் சுரக்க வைத்து வாயில் உணவுகள் தங்க விடாமல் பாதுகாப்பதுடன் பக்டீரியாவில் இருந்தும் பாதுகாக்கிறது. இரண்டையும் சேர்த்து உண்பதனால் வாயின் அமிலத் தன்மையைக் குறைத்து பற்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
5. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுதல்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் பக்கவாதாம் வராமல் தடுக்க முடியும்.
6. ஆப்பிளும் நிலக்கடலை வெண்ணெய்யும்.
ஆப்பிளுடன் நிலக்கடலை வெண்ணெய்யைச் சேர்த்து சிற்றூண்டியாக வேலைத் தளங்களிலும், வீட்டிலும் சாப்பிடுவதனால் இலகுவாக பசியைப் போக்குவதுடன், நீண்ட நேரம் பசி ஏற்படுத்தாது. இதனால் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.
7. சாலட்.
ஆப்பிளை அன்னாசி, திராட்சை, பெரி போன்ற பல பழங்களுடன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவதனால் சுவையான உணவு கிடைப்பதுடன், உடலிற்கு ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.