(டொலரின் பெறுமதியை 160 ஆக குறைக்க விசேட திட்டம்)
இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு விசேட முதலீட்டு திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டை மேம்படுத்துவதற்கான முன்னேற்றகரமான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இதன் மூலம் எதிர்வரும்2 வருட காலப்பகுதியில் 800 தொடக்கம் 1000 கோடி ரூபாவுக்கு இடையில் வெளிநாட்டு நாணயம் கிடைக்கும், இந்த திட்டத்தின் மூலம் முதல் வருடத்தில் டொலரின் பெறுமதி 160 ஆக குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.