• Thu. Apr 9th, 2026

“அமித் வீரசிங்க, டான் பிரியசாத் ஆகியோருக்கு எமது கட்சியில் இடமில்லை” – பொது ஜன பெரமுன

Byadmin

Nov 26, 2018

(“அமித் வீரசிங்க, டான் பிரியசாத் ஆகியோருக்கு எமது கட்சியில் இடமில்லை” – பொது ஜன பெரமுன)

திகன கலவரத்தில்  செயல்பட்டதாக அறியப்படும் மஹசொன் பலகாய தலைவர்  அமித் வீரசிங்க மற்றும் அவரின் சகாவான டான் பிரியசாத் ஆகியோர்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கட்சி சார்பில்  எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான ஊடக செய்தியை அக்கட்சி  மறுத்து உள்ளது.

நாங்கள் முற்றுமுழுதாக இது இச்செய்தியை மறுக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான இணையதளங்கள்  இவ்வாறு பொய் செய்திகளை பரப்புகின்றன. அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களை தெரிவு செய்யும் வேலையை ஆரம்பிக்க கூட  இல்லை எனவும்,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின்  பேருக்கும், கட்சிக்கும்  களங்கம் விளைவிக்கும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மேலும் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் மூலம்  கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *