• Tue. Apr 7th, 2026

புதிய அமைச்சரவை பெயர்ப் பட்டியல் இன்று(18) மாலை ஜனாதிபதிக்கு…

Byadmin

Dec 18, 2018

(புதிய அமைச்சரவை பெயர்ப் பட்டியல் இன்று(18) மாலை ஜனாதிபதிக்கு…)

புதிய அமைச்சரவைக்காக நியமிக்கப்பட வேண்டிய 30 அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(18) மாலை கையளிக்கப்படுமென, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய அமைச்சுகளும் குறித்த பட்டியலுடன் இணைத்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவை சத்தியபிரமாணம் செய்து கொள்ளத் தயாராகவிருப்பதாகவும் குறித்த உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *