• Tue. Apr 7th, 2026

மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவரானதற்கு, சுமந்திரன் எதிர்ப்பு

Byadmin

Dec 18, 2018

(மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவரானதற்கு, சுமந்திரன் எதிர்ப்பு)

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

ஒரு கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மற்றுமொரு கட்சியின் அங்கத்துத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

எனவே இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனவும் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *