(அமைச்சர் ஹக்கீமுக்கு மேலும் ஒரு கொழுத்த அமைச்சு..)
விரைவில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு கடந்த அரசில் வழங்கப்பட்ட அதே அமைச்சுக்கு மேலதிகமா இன்னும் ஒரு கொழுத்த அமைச்சு வழங்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கிறன.
இது தொடர்பில் நாம் அக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலரிடம் வினவிய போது அதுபற்றி தங்களுக்கு தெரியாது என குறிப்பிட்டனர்.
கடந்த அரசில் வழங்கப்பட்ட நீர் வடிகாலமைப்பு மற்றும் நீர் வழங்கல் நகர திட்டமிட்டல் அமைச்சுக்கு மேலதிகமாக கப்பல் போக்குவரத்து அமைச்சும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
தற்போது அமைச்சரவை 30 க்குள் மட்டுப்பட வேண்டிய தேவை இருப்பதால் ஹக்கீமுக்கு மேலும் ஒரு அமைச்சு வழங்கப்பட சாத்தியம் உள்ளது என கூறப்படுகிறது.