• Sat. Oct 11th, 2025

இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில், நாங்கள் வெற்றி பெறுவோம் – பசில்

Byadmin

Jan 2, 2019

(இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில், நாங்கள் வெற்றி பெறுவோம் – பசில்)

எம்முடைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற வருடமாக இவ்வருடம் அமையவுள்ளது. இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதுடன், நாட்டை சீரமைக்கும் பொறுப்பும் எமக்குள்ளது. கட்சியென்ற வகையில் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட அதிகளவில் உழைக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையினை எம்மிடமிருந்து இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை வழங்குவதற்கான இயலுமை எம்மிடம் உள்ளது என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 ஆம் ஆண்டுக்கான கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று  -01- கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ தொடர்ந்து கூறுகையில்,
எமது கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடன், அவரது வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வருகின்றது. இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன என்ற கட்சியின் தலைமைத்துவத்தின் ஊடாக வெற்றி பெறும் வாய்ப்பு எமக்குள்ளது. அதற்குரிய சக்தியும், தைரியமும் எம்மிடம் உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *